சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம் !


-கனகராசா சரவணன்-

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மாத்தறை பொலிசார் தெரிவித்தனர்.

கொரோனா இடர் அவதான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை மாத்தறைக்கு அழைத்துவந்து கேனதுர தலல்ல பிரதேசத்தில் அவரது நண்பனின் வீட்டில் தங்கவைத்துள்ளார் .

இதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மாத்தறை மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் சில்லா மற்றும் உதவி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கரா ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக மேற் கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித் பொலிஸ் அதிகாரி மற்றும் பெண் ஆகிய இருவரையும் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தும் தடுப்பு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

No comments: