விவசாயிகளுக்கு விசேட அறுவடை கடன் திட்டம் !விவசாயிகளுக்கு அறுவடைக்கான விசேட கடன் பெற்றுக்கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்

உரம் (பசளை) இறக்குமதிக்காக 10 பில்லியன் ரூபா  ஒதுக்கீடு செய்ய அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கலைஞர்களுக்கு சலுகை வட்டி முறைமையின் கீழ் கடன் வழங்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதேவேளை, வௌிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள  1989 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு வெளிநாட்டில் பணி புரிபவர்கள்  தொடர்பான தகவல்களை உறவினர்கள் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments: