பிரித்தானியாவில் சிவகாமி அன்னையின் ஜனன தினத்தை முன்னிட்டு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

நமது நிருபர்

சிவகாமி அன்னையின் ஜனன தினத்தை முன்னிட்டு உலர் உணவு பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

சிவகாமி அன்னையின் 84வது ஜனன தினத்தை முன்னிட்டு, கொரோனா அனர்த்தத்தால் பாதிப்புற்றிருப்பவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அவசர சேவை உதவியாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாதேவன் சத்தியரூபன் அவர்களினால் பிரித்தானியாவில் உள்ள King Georges வைத்தியசாலை, Queens வைத்தியசாலை, Ilford பொலிஸ் நிலையம், Ilford அவசர சிகிச்சை பிரிவு மற்றும் The Lodge care home சமூக அமைப்பிற்கும் இவ்உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இலங்கையிலும் கொரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாதேவன் சத்தியரூபன் அவர்களினால் பத்து வருடங்களுக்கு மேலாக பல சேவைகளை இலங்கையில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments: