கிழக்கிலிருந்து மலையகத்திற்கு விஸ்தரிக்கப்பட்ட நிவாரணசேவை


(காரைதீவு சகா )

கிழக்கில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில், கடந்த 56நாட்களாக மனிதநேய உலருணவு, நிவாரணங்களில் ஈடுபட்டுவந்த, கொவிட்கெத்து ,அணியினரின் பார்வை நேற்றுமுன்தினம்,  மலையகத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டது.

மலையகத்தின், பதுளை மாவட்டத்தின் ,பசறைப்பிரிவிலுள்ள, லுணுகல கிராமத்தில் வாழும் ஒருதொகுதி, தோட்டப்புற மக்களுக்கு 109 பொதிகள் வழங்கி,வைக்கப்பட்டன.இதற்கு, ஜேர்மனில்வாழும் மகான் ,கோடீஸ்வரனின் 'வசீகரன்அறக்கட்டளை நிதியம்' நிதியுதவியை வழங்கியிருந்தது.

அம்பாறை ,மாவட்ட சமுகசெயற்பாட்டாளர் ,தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சென்ற கொவிட்கெத்து ,அணியினர் அந்த மக்களைச்சந்தித்து, இப்பொதிகளை வழங்கினர்.

லுணுகலை வாழ் வசீகரன்அறக்கட்டளை ,நிதிய ,சமுகசெயற்பாட்டளர் திருமதி எஸ்.நிஷா ,விடுத்து ,வேண்டுகொளின்பேரில் இவவுதவிகள் அங்கு 109குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

லுணுகல தோட்ட ,பிரதிநிதி க.தனுசியன் ,குழுவினரை வரவேற்க சமுகசெயற்பாட்டாளர் ,வி.ரி.சகாதேவராஜா தவிசாளர் கே.ஜெயசிறில் ஆகியோர் கொரோனா ,தடுப்புசெயற்பாடுகள் ,தொடர்பான விழிப்புணர்வு விளக்கங்களையும், மலையகப்பாய்ச்சலுக்கான காரணத்தையும் தெளிவுபடுத்தி உரையாற்றினர்.

இறுதியில் ,தோட்டபிரதிநிதி ,பி.லட்சுமணன் ,அங்குள்ள சமகால நிலைவரம் தொடர்பில் உரையாற்றினார்.

மக்கள் இருகரம் ,கூப்பி நன்றி ,கூறிய ,அதேவேளை ,இதுவரையும் யாரும் தம்மைக்கவனிக்கவில்லையென ,அழாக்குறையாக வேதனையுடன் கூறினர். ஊடகவியலாளர் கு.கேதீஸ் கலந்துகொண்டார்.
No comments: