அக்கரப்பத்தனை பிரதேசத்தில் குளவி கொட்டியதில் 70 வயது முதியவர் பலி


(நீலமேகம் பிரசாந்த்)
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட டயகம ,2ம் பிரிவில் குளவி கொட்டியதில் 70 வயதுடைய முதியவரொருவர், (13/05/2020) இன்று மாலை 2 மணியளவில் ,ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

குறித்த வயோதிபர் குறித்த தோட்டத்தில் விறகுக்காக சேகரிக்க சென்ற போது மரத்திலிருந்த குளவி கூடு கலைந்து பெரியவரை தாக்கியிருக்கின்றது இதனையடுத்து தப்பிக்க முயற்சி செய்த  குறித்த முதியவர் ஓட முடியாமல் குளவிக்கொட்டுக்கு இழக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரை 200க்கும் மேற்பட்ட குளவிகள் தாக்கியுள்ளதாக ஊர்மக்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: