டிக்கோயா, தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 61 பேர் இடம்பெயர்வு


க.கிஷாந்தன்


அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டிக்கோயா, தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் 61 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அட்டன் - டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்தவரும் அடை மழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்து வருகின்றது. ஆறுகளும் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் பல பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. வீடுகளும் சேதமடைந்து வருகின்றது.

இந்நிலையிலேயே இன்று தரவளை மேல்பிரிவு தோட்டத்திலும் மக்கள் பாதிக்கப்பட்டனர். இடம்பெயர்ந்தவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய சீரற்ற காலநிலையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments: