அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் இரண்டாம் கட்ட 5000 ரூபா நிவாரணம் வழங்கி வைப்பு


(காரைதீவு சகா)

கொவிட்19, கொரோனா பரவல், காரணமாக, அரசினால், இரண்டாம் ,கட்டமாக வழங்கப்பட்டுவரும் 5000,ருபா கொடுப்பனவு, அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர், பிரிவுகளிலும் வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் அம்பாறைமாவட்டத்திலுள்ள ,திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 22 கிராம, உத்தியோகத்தர், பிரிவுகளில் அடிப்படையில் 6052 சமூர்த்தி பயனாளிகள் ,குடும்பங்கள்,, 1139 சமூர்த்தி காத்திருப்போர் குடும்பங்கள்;,883 தொழில், பாதிப்பு குடும்பங்கள் ,என 8074 குடும்பங்களுக்கு தலா ஜந்தாயிரம், ரூபா வீதம் நான்கு கோடியே முன்று இலட்சத்தி 70ஆயிரம் ரூபா பணம், வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில், பிரதேச,செயலாளர் தங்கையா, கஜேந்திரன் இக்கொடுப்பனவை, தாமே ,கிராமம் ,கிராமமாகச்சென்று, வழங்கிவைத்துவருகிறார்.

இவ் இரண்டாம் ,கட்ட மானிய பணம், வழங்கும், நிகழ்வானது, திருக்கோவில் பிரதேச செயலக ,சமூர்த்தி ,தலைமை, முகாமையாளர் ரீ.பரமானந்தத்தின் ஏற்பாட்டில் ,கிராமங்கள் ,தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் ,திருக்கோவில், 2 3 ஆகிய கிராம, உத்தியோகத்தர், பிரிவுகளில், நேற்று ஜந்தாயிரம், ரூபா பணம், வழங்கி, வைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து, ஏனைய கிராம, உத்தியோகத்தர், பிரிவுகளிலும், பணம் வழங்கும் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

திருக்கோவில், பிரதேச, மக்களுக்கான, இரண்டாம், கட்ட மானிய, பணங்களை பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், உதவிப் பிரதேச ,செயலாளர் கே.சதிசேகரன் சமூர்த்தி தலைமை ,முகாமையாளர் ரீ.பரமானந்தம் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை ,உத்தியோகத்தர்கள் ஆகியோர் வழங்கிவைத்தனர்..

நாட்டில் ,ஏற்பட்டுள்ள கொரோனா நோய், தாக்கம் ,காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, நிலையில் மக்களின், உணவுத், தேவையை ,பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ,அரசினால், இரண்டாம் கட்டமாக, ஜந்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவது தெரிந்ததே.

No comments: