அம்பாறையில் இரண்டாம் கட்டமாக 5000 ரூபாய் கொடுப்பனவு முன்னெடுப்பு


(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அரசாங்கத்தின், ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய சமூகசேவைகள் ,திணைக்களத்தின் ஊடாக, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முதியோர் விசேட தேவையுடையோர், மற்றும் புற்றுநோய், சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட 5000.00 ரூபா கொடுப்பனவுகளை வழங்கிவைக்கும், நிகழ்வு இன்று (15.05.2020 ) பிரதேச செயலகத்தின் 29 கிராம, சேவையாளர் பிரிவுகளிலும் இடம்பெற்றது.

பிரதேச ,செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜின் வழிகாட்டலுக்கு அமைய, இந்தக் கொடுப்பனவுகள், பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.,  இதன்போது மாதாந்த உதவிபெறுவோருக்கான, கொடுப்பனவுகளும் ,வழங்கப்பட்டது.

பிரதேச, செயலகத்தின் கீழுள்ள, 29 கிராம ,சேவையாளர் பிரிவுகளிலுமுள்ள 1187 பயனாளிகளுக்கும், என 58இலட்சத்து 72ஆயிரத்து அறுநூறு ரூபா (5872600.00) நிதி பகிர்ந்தளிக்கப்பட்டன.

சமூக இடைவெளி, பேணப்பட்டு ,சுகாதார திணைக்களத்தின், அறிவுறுத்தல்கள் ,பின்பற்றப்பட்டு பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வுகளில் சமூக சேவைகள், உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முர்சித், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி மற்று கிராம மட்டங்களில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.No comments: