மட்டு வவுணதீவு பிரதேசத்தில் 4 கசிப்பு வியாபாரிகள் கைது


-கனகராசா சரவணன்-
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள சிப்பிமடு, காஞ்சரம்குடா பிரதேசத்தில் சட்டவிரோதமாக இரண்டு மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியில் கசிப்பு எடுத்துச் சென்ற கசிப்பு வியாபாரிகள் 4 பேரை நேற்று  வெள்ளிக்கிழமை (01) பகல் கைது செய்ததுடன் 55 ஆயிரத்து 750 மில்லி லீற்றர் கசிப்பு 2 மோட்டர் சைக்கிள் ஒரு முச்சக்கரவண்டியை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனா.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சம்பவதினமான இன்று வெள்ளிக்கிழமை சிப்பிமடு பிரதேசத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்து போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் 22 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பையும் முச்சக்கரவண்டியில் இருவர் 15 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்;பையும் அதில் ஒருவர் தனது உடமையில் 7 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பையும் எடுத்துச் சென்ற 3 பேரை கைது செய்தனர்.

இதேவேளை காஞ்சிரம்குடா பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் 11 ஆயிரத்து 250 மில்லி லீற்றர் கசிப்பை எடுத்துச் சென்ற ஒருவரை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர்கள் ஆயித்தியமலை மற்றும் மைலம்பாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த கசிப்பு வியாபாரிகள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

No comments: