அறுவடையில் 4 லட்சருபா பெறும் எமக்கு 1000 ரூ-பாகூட இல்லை!


அறுவடையில் 4லட்சருபா பெறும் எமக்கு 1000ருபாகூட இல்லை!
குழந்தைக்கு பால்மா அரிசி வாங்கக்கூட முடியாதஅவலநிலை!!


வியாபாரிகளின்மையால் தெருவில் வீசப்படும் கத்தரிக்காய்கள்
பாரிய நட்டத்தை எதிர்நோக்கும் ஊறணி விவசாயிகள்.
பொத்துவில் ஊறணி கத்தரித்தோட்டத்திலிருந்து நேரடி றிப்போர்ட்.

(காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா)

'வழமையாக ஒருதரம் அறுவடைசெய்தால் 3லட்சருபா தொடக்கம் 4லட்ச ருபா வரை வருமானம் கிடைக்கும். ஆனால் இம்முறை 1000ருபா கூட இதுவரை கிடைக்கவில்லை. கொரோனாவால் இவ்வாறு மோசமாகப்பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசாங்கம் கருணைகாட்டவேண்டும்.'

இவ்வாறு பாரிய மனவேதனையுடன் கூறுகிறார் பொத்துவில் ஊறணி கத்தரித்தோட்ட விவசாயி எஸ்.கண்ணன்.

பொத்துவில் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய ஊறணி மணற்சேனைக்கிராமங்களுக்கு கடந்தவாரம் உலருணவு நிவாரணம் வழங்கச்சென்றிருந்தோம்.


எமது குழுவில் சமுகசெயற்பாட்டாளர்களான கே.ஜெயசிறில் சோ.வினோஜ்குமார் விரி.சகாதேவராஜா பு.கேதீஸ் கே.மோகன் சோ.தினேஸ்குமார் உள்ளிட்டோர் இருந்தனர். பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் சமுகமளித்திருந்தார்.

அங்கு உலருணவை மிகஆவலாகப் பெற்றுக்கொண்ட மக்கள் தமது விவசாய உற்பத்திப்பொருட்களைவ pற்பனைசெய்யமுடியாமல் திண்டாடுகின்றோம். ஊரடங்கால் வியாபாரிகள் வருவதில்லை. கத்தரிக்காய் வெண்டிக்காய்களை தெருவில் வீசவேண்டியுள்ளது. அல்லது மாட்டுக்கு தீவனமாக வழங்கவேண்டியுள்ளது.எனவே எமது ஜீவனோபாயத்திற்கும் வழிகாட்டுங்கள் என்று அழாக்குறையாக கூறினார்கள்.


நாம் மறுநாள் அங்கு சென்று அங்குள்ள கத்தரித்தோட்டங்களிலிருந்து சுமார் 4000கிலோ கத்தரிக்காய்களை கிலோ 25ருபாவுக்கு கொள்வனவுசெய்து அவற்றை கல்முனைப்பிராந்தியத்திலுள்ள சொறிக்கல்முனை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு காரைதீவு கல்முனை போன்ற பகுதிகளுக்கு இலவசமாக விநியோகம்செய்தோம்.இந்த வேளையில் ஊறணிக்கத்தரித் தோட்டத்தில் எம்மவர்கள் அவர்களுடன் சேர்ந்து கத்தரிக்காய் பறித்துக்கொண்டிருக்கையில் விவசாயி கண்ணனுடன் பேச்சுக்கொடுத்தேன்.

விவசாயி கண்ணன் அழாக்குறையாக இவ்வாறு கூறினார்.

'நான் எனது அப்பாட காலத்திலிருந்து இவ்விவசாயத்தைச் செய்துவருகிறேன். ஒவ்வொரு வருடமும் அறுவடைக்காலம் வந்தால் எமக்கு மிக்க மகிழ்ச்சி. 2000கிலோ அளவில் அறுவடையாகும். சுமார் 3லட்சம் முதல் 4லட்ச ருபா வரை விற்பனையாகும். நிறைய விவசாயிகள் பொத்துவில் அக்கரைப்பற்றுப் போன்ற பகுதிகளிலிருந்துவந்து வாங்கிப்போவார்கள்.
ஆனால் எமது கெட்டகாலம். அறுவடைக்காலத்தில் இந்த பொல்லாத கொரோனா வந்திட்டுது.இதனால் ஊரடங்கு. யாரும்வருகிறார்களில்லை.
இம்முறை 1000ருபாவுக்குக்கூட யாரும் வாங்கவரவில்லை. தெருவில் வீசவேண்டியநிலை. நீங்களும் இன்று வந்திராவிட்டால் எமது பாடு பெரும் திண்டாட்டமாக இருந்திருக்கும்.

உண்மையைச்சொன்னால் எனது 6மாதக்குழந்தைக்கு அடுத்தவேளை பால்மாப் பக்கட் வாங்கக்கூட காசில்லாமல் உள்ளேன். அரிசி வாங்கமுடியாது. கடும் கஸ்ட்டத்துக்குள் மாட்டியுள்ளோம். 

எனவே அரசாங்கம் எம்மை ஒருதரம் திரும்பிப்பார்க்கவேண்டும். ஏதாவது நிவாரணம் வழங்க துரித நடவடிக்கைஎடுக்கவேண்டும்.' என்றர்.

அரசாங்கம் ஒரு புறம் வீட்டுத்தோட்டங்களை உருவாக்க பாரியஅளவில் செயற்பட்டக்கொண்டிருக்கின்ற இந்தவேளையில் இப்படிப்பட்ட விவசாயிகளின் ஏக்கங்களையும் புரிந்துகொண்டு உதவிசெய்ய முன்வரவேண்டும் என்பதே எமது அவர்.


No comments: