20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது


எதிர்வரும் ஜீன் மாதம் 20, திகதி  நடத்துவதாக, உத்தேசிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தேர்தலை நடத்தமுடியாது, என்று தேர்தல்கள், ஆணைக்குழு உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

மேற் குறித்த தினத்தில் நடத்துதவற்கு ,வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை, உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்-

தேர்தல்கள் ஆணைக்குழு  சார்பில், முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற் குறித்த ,திகதியில், தேர்தலை நடத்த முடியாது என மன்றுக்கு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய சூழ், நிலையில் ,தேர்தலை நடத்துவது சாத்தியமல்ல எனவும் அவர் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் தெரிவித்தார்.

No comments: