இரகசியமாக வகுப்புக்களை நடத்திவந்த 2 ஆசிரியர்களும் 14 மணவர்களும் தனிமைப்படுத்தலில்


(மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புகைப் படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது)

(சதீஸ்)
சுகாதார முறைமையினை கடைபிடிக்காது மேலதிவகுப்புகளை இரகசியமாக நடாத்தி வந்த, இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் சுயதனிமை படுத்தலுக்கு உட்படுத்த, பட்டுள்ளதுடன் மேலதிக வகுப்பு நடாத்தி வந்த வகுப்பறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள, கொரோனா தொற்று வைரஸ் காரணமாக நாட்டில் உள்ள அனைத்துபாடசாலைகளுக்கும், அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும், இரகசியமாக மேலதிக வகுப்புகளை நடாத்தி வந்த இச்சம்பவம்,லிந்துளை நகரசபைக்குட்பட்ட தலவாகலை பகுதியில் இன்று இடம் பெற்றுள்ளது.

சுகாதார ஆலோசனைகளை  கடைப்பிடிக்காது ,உயர்தரமாணவர்களுக்கு வகுப்பு நடாத்தி வந்தமை தொடர்பில் தலவாகலை லிந்துளை, நகரசபை தலைவருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கமைய  தலவாகலை பொது சுகாதார பரீசோதகர் மற்றும் தலவாகலை, பொலிஸார் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டதைதொடர்ந்து ,குறித்த இரண்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் ,அவர்களுடைய ,வீடுகளில் ,சுயதனிமை படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.


குறித்த வகுப்புகளை நடாத்த கொரோனா ,தொற்று ஏற்படுவதற்கு முன்பு இரண்டுஆசிரியர்களும் ,தலவாகலை ,லிந்துளை நகரசபையில் அனுமதி பெற்றுள்ள ,போதிலும்கொரோனா, தொற்று ஏற்பட்மையினால் பாடசாலைகள் மற்றும் மேலதி ,வகுப்புகள்நடாத்த அரசாங்கத்தினால் தடைசெய்யபட்டுள்ளது 

இதேவேளை , சுகாதார அமைச்சின்,அறிக்கை கிடைக்க பெற்றவுடனே மேலதிக வகுப்புகளையோ பாடசாலைகளையோ நடாத்த
முடியும். 

அரசாங்கத்தின் ,சட்டத்திட்டங்களை ,மீறி மேலதி வகுப்புகளை நடாத்தியமையினாலும் சுகாதார ,முறைமையினை மேற்கொள்ளாமையினாலுமே ,இவர்கள் சுயதனிமை படுத்தபட்டதாக பொது சுகாதார பரீசோதகர்கள்  தெரிவித்தனர்

தனிமை படுத்தபட்டவர்களுள் ,ஒரு ஆசிரியர் லிந்துளை பொலிஸ்பிரிவிற்கு உட்பட்டவரும் மற்றுமொரு, ஆசிரியர் மஸ்கெலியா
பொலிஸ்பிரிவிற்குட்பட்டவரும், மாணவர்கள் 14 பேரும்  தலவாகலை லிந்துளை நகரசபைக்குட்பட்டவர்கள் ,என பொதுசுகாதார பரீ,சோதகர்களின் ஆரம்பகட்ட ,விசாரனைகளில், இருந்து தெரிய ,வந்துள்ளமை ,குறிப்பிடதக்கது.

No comments: