சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட 172 மதுபான போத்தலை மீட்ட பொலிஸார்


(சந்திரன் குமணன்)

அனுமதி பத்திரமின்றி ,சட்டவிரோதமாக, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 172 மதுபான, போத்தல்களை ,சவளக்கடை ,பொலிசாஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை, பொலிஸ் ,பிரிவிற்குட்பட்ட ,பகுதியில் மதுபானபோத்தல்கள் பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை ,பொலிஸ் நிலைய, பொறுப்பதிகாரி, ஆர். ரம்ஷீன் பக்கீருக்கு கிடைக்கப்,பெற்ற, தகவல் ,ஒன்றினை ,தொடர்ந்து வியாழக்கிழமை(14) முற்பகல் சம்பவ இடத்திற்கு ,சென்ற பொலிஸ் குழுவினர் ,3 சந்தேக நபர்கள் உள்ளடங்களாக கைது செய்ததுடன் ,பல்வேறு, மறைவிடங்களில் இருந்து சுமார் 172 மதுபான போத்தல்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு, மீட்கப்பட்ட, மதுபான, போத்தல்கள், சுமார் ஒரு ,இலட்சம் பெறுமதியானவை எனவும், அளவிற்கு, அதிமான மதுபான,  போத்ததல்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

மேலும் ,கைதான, மூன்று ,சந்தேக நபர்கள்,  தொடர்பில்,   விசாரணைகளை பொலிஸார்,  மேற்கொண்டு, வருவதுடன் வெள்ளிக்கிழமை(15) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


No comments: