அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பினால் பனங்காடு வைத்தியசாலைக்கு 15 ஆயிரம் மாத்திரை உறைகள் அன்பளிப்பு .


(வி.சுகிர்தகுமார்) 

அரச வைத்தியசாலைகளின் சிறந்த செயற்பாடுகளை ஊக்குவிக்கும்

 நோக்குடன் அங்குள்ள சிறிய தேவைப்பாடுகளை நிறைவேற்றி வினைத்திறனான சேவையினை அதிகரிக்கும் பணியில் தனியார் சமூக அமைப்புக்களும் கைகோர்த்து செயற்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பினரும் அரச வைத்தியசாலைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் சேவையினை வளப்படுத்தும் முகமாக அங்கு தேவைப்பாடாக இருந்த மாத்திரைகள் உறைகளை இன்று வழங்கி வைத்தனர்.

அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் அன்புக்கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் 15 ஆயிரம் மாத்திரைகள் உறைகள் வைத்திய அதிகாரி சக்கீலிடம் கையளிக்கப்பட்டன.


No comments: