மட்டக்களப்பில் ஆண் ஒருவரை கொலை செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்


(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு ,கல்லடி வேலூர், பிரதேசத்தில் கடந்த, வெள்ளிக்கிழமை இரவு ஆண் ஒருவரை வெட்டிக் கொலை, செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று ,திங்கட்கிழமை, (18), மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி. றிஸ்வான், முன்னிலையில், ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை ,எதிர்வரும் 1ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்

காத்தான்குடி பொலிஸ், பிரிவின் கீழ் உள்ள ,கல்லடி வேலூர் 4ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த ஆட்டோ, சாரதியான 29 வயதுடைய, இராமசந்திரன் மனோரதன்,  என்பவரே கடந்த ,வெள்ளிக்கிழமை (15), இரவு அவரது வீட்டின் பின்பகுதி வெற்றுக் ,காணியில், வைத்து ,கோடாலியால், வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்

இதில் சந்தேகத்தில் மண்டூரைச் செர்ந்த இருவரை சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

இதில் உயிரிழந்த, குறித்தநபர் பெண் ஒருவருடன் ,ஏற்பட்ட தொடர்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு, முன்னர் அந்த, பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சம்பவதினமான, இரவு, தற்கொலை செய்துகொண்ட, பெண்ணின் 24 ,வயதுடைய ,சகோதரன் அவரின் 25 வயதுடைய நண்ப,ர் ஆகிய இருவரும் ,மதுபோதையில், குறித்த நபரின் வீட்டின் பின்பகுதி, வெற்றுக், காணியில் தாம் இருப்பதாக அவரை அங்குவருமாறு கையடக்க, தொலைபேசி ,ஊடாக அழைப்பு விடுத்து அவரை அங்கு வரவழைத்து ,அவர் மீது கோடாரியால் ,வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின், ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் ,தெரிவித்தனர்

இச்சம்பவத்தில் சந்தேகத்தில், கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று திங்கட்கிழமை (18) திகதி மட்டக்களப்பு நீதவான், நீதிமன்றத்தில், நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில், ஆஜர்படுத்தப்பட்டபோது, இவர்களை, எதிர்வரும் 1ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments: