கஜேந்திரகுமார் உள்ளி்ட்ட 11 பேர் மீதான உத்தரவை மீளப்பெற்றது யாழ் நீதிமன்றம்


தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பென்னம்பலம் உள்ளிட்ட 11 பேர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அதனை வாபஸ் பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

மேற் குறிப்பிட்ட தனிமைப்படுத்தல் தொடர்பில் குறித்த உத்தரவினை மீளப்பெறுமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுமரிசீலினையின் போது உத்தரவை மீளப்பெறும் உத்தரவை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர் போல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நோய் அறிகுறி இல்லாதவர்களை தனிமைப்படுத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகுவர் என்பதால் தனிமைப்படுத்தல் உத்தரவை மீளப்பெறுமாறு பிரதிவாதிகளால் மன்றில் கோரப்பட்டிருந்தது.

மேற் குறித்த 11 பேருக்கும் நோய் தொற்று  அறிகுறி தொடர்பிலான மருத்துவர் உறுதிப்படுத்தும் அறிக்கை பொலிசார் மன்றில் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: