லிந்துலை தோட்ட பகுதியில் குளவி கொட்டிற்கு இலக்காகிய 10 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி


(சதீஸ்)
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை  மட்டுகளை தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பத்து பெண்தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துளை வைத்தியசாலையில்அனுமதிக்கப்டுள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவம் இன்று வெள்ளிகிழமை மற்பகல் 11.30மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துகொண்டிருந்த வேளை தேயிலலைய செடியின் அடிப்பகுதியில் இருந்து குளவி கூடு கலைந்துதொழிலாளர்களை தாக்கியுள்ளதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள்
தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் பத்து  ()பெண் தொழிலாளர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதோடு காயங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லையென வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.




No comments: