மீனவர்கள் தங்களது மீன்பிடி தொழிலை மேற்கொள்ள எந்தவித தடைகளும் இல்லை


-சந்திரன் குமணன்-

சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்மந்தமாக பிரதேச செயலாளர்கள் ,பிரதே சபை தவிசாளர்கள் உட்பட்ட அனைத்து பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டும் நிகழ்வு சனிக்கிழமை(25) சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட 24படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே அவர்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்மந்தமாக மக்களுக்கு பள்ளிவாசல்கள் ஊடாக தெளிவான முறையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்இ ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியில் செல்வதுஇஒன்று கூடுவது ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் இராணுவ தளபதியினால் தெளிவுபடுத்தும் பட்டது.

மேலும் கரையோர மீனவர்கள் தங்களது மீன்பிடி தொழிலை மேற்கொள்ள எந்தவித தடைகளும் இல்லை என அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே தெரிவித்தார்.

இதன்போது இஸ்லாமியர்களின் புனித ரமழான் நோன்பு காலத்தில் இஸ்லாமிய மத தலைவர்கள் மாத்திரம் பள்ளிவாசல்களுக்கு சென்று ஒலி பெருக்கிகள் மூலம் மத பிரசங்கங்களை ஜும்மா பள்ளிகளில் மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 

மேலும் இருந்த போதிலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மதித்து செயற்பட வலியுறுத்தினார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் சுய தனிமைப்படுத்தில் இருந்த காரணத்தினால் ஏனைய பிரதேசத்திற்கு பரவாமல் இருந்தது அது போன்று நாம் மிகவும் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்ள வேண்டும் . பலர் விவசாய நடவடிக்கைகளுக்கு செல்வதாக அனுமதியை பெற்று மண்வெட்டியுடன் அலுவலகத்திற்கு செல்வது போன்று ஆடைகளுடன் வீதியில் நடமாடுவதுதை குறைத்து கொள்ள வேண்டும் என சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகேவினால் அறிவுரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை,காரைதீவு ,நிந்தவூர் பிரதேச செயலாளர்கள், மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜெயலத் , 241 படைப்பிரிவின் தளபதி கேணல் ஜானஹ விமலரத்ன , 3 விஜயபாகு படை பிரிவின் கல்முனை முகாம் பொறுப்பதிகாரி டபிள்யூ ஆர். தர்மசேன, பள்ளிவாசல் முற்சபையினர், இந்து மத குருமார் , வர்த்தக்சங்க பிரதிநிதிகள், என பலர் பங்கேற்றிருந்தனர்

No comments: