தேசிய அடையாள அட்டையின் பிரகாரம் ஊரடங்கு அனுமதி !


கொழும்பு கம்பஹா களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந் ஏனைய மாவடடங்களில்-

-எதிர்வரும் 27ம் திகதி காலை 05 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டமானது  மே மாதம் முதலாம் திகதி வௌ்ளிக்கிழமை வரை தினமும்  இரவு 08  மணி தொடக்கம்  காலை 05 மணிவரை  நாளாந்தம் ஊரடங்கு அமுல் படுத்தப்படும்.  ஏனைய நேரங்களில் ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டிருக்கும்.

மிக முக்கிய  தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியேறுபவர்கள்  தமது   தேசிய அடையாள அட்டைகளின் இறுதி இலக்கத்தை அடிப்படையாக வைத்து  வெளியில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முக்கியமானது  !


இதற்கமைய 

திங்கட் கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 1 அல்லது 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி முடியும்.

செவ்வாய் கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 3 அல்லது 4 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள்  வெளியேறி முடியும்.

புதன்கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 5 அல்லது 6 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி முடியும்.

வியாழக்கிழமை கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 7 அல்லது 8 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள்  வெளியேறி முடியும்.

வெள்ளி கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 9 அல்லது 0 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி முடியும்.

இவை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே மக்கள் சுயபாதுகாப்பினை ஏற்படுத்திக் கொள்வது மிகமுக்கியமானது.
No comments: