கடற்படை தொடர்பில் விசேட அறிவித்தல் !


கடற்படையில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பில் கடற்படை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கடற்படையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து முகாமில் இருந்த நான்காயிரம் வீரர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் சுகாதார ரீதியில் கடற்படை தொடர்பில் பயத்தினை ஏற்படுத்த தேவையில்லை என குறித்த அறிக்கையில் கடற்படை கேட்டுக் கொண்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கி பழகிய ஏனைய கடற்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுமுறையில் இருக்கும் அல்லது முகாமுக்கு வெளியில் இருக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களை
0112 44 53 68
0117 19 22 51

 இலக்கங்களை அழைத்து அறிந்துக்கொள்ள முடியும்

 0112 44 14 54 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும்
 011 220 13 65 என்ற வட்ஸ் அப் இலக்கத்திற்கும் தொடர்பபு் கொண்டு  தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என கடற்படை அறிவித்துள்ளது.

No comments: