ஊரடங்கு தளர்வு தொடர்பில் விசேட செய்தி !


கொரோனா தொற்று அபாயவலயங்களாக இனங்காணப்பட்டுள்ள பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை தற்காலிகமாக தளர்த்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் அம்பாறை மாவட்டத்தின் அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில்  உள்ள ஊரடங்கு எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்தப்டவுள்ளதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணிக்கு தற்காலிகமாக ஊரடங்கு சட்டமானது தளர்த்தப்படவுள்ளதுடன் அத்தியாவசிய தேவைகளுக்கான அனுமதியும்  கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படவுள்ளது.

மேலும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவை தவிர கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்நுழைதல் மற்றும் வெளியேறுதல் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: