ஒலுவில் கடற்படை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை !


-அகத்தியன் செய்திப்பிரிவு-

அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் இடைத்தங்கல் முகாமில் இன்று 25 சனிக்கிழைமை கொரோனா பரிசோதனைகள் இடம் பெற்றதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார  சேவைகள் பனிமணை பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் தலைமையில் நடைபெற்ற இப்பரிசோதனையில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர்.எஸ் அகிலன் மற்றும் வைத்தியர்.ஆரிப், வைத்தியர்.காதர், வைத்தியர்.சுகைல்ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலுவி்ல் இடைத்தங்கல் முகாமில் கடமையில் இருந்த சுமார் 50 வீதமான  கடற்படையினரிடம் இருந்தும் இடைத்தங்கல் முகாமில் உள்ள கொரோனா சந்தேக நபர்களிடமிருந்தும்  மாதிரிகள் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இதன் முடிவுகள் இன்னும் இரு தினங்களில் கிடைக்கப் பெறும் என்றும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

மேலும் சில தினங்களுக்கு முன்னர் 52 பேருக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் இதன் முடிவுகளின் பிரகாரம் ஒருவருக்குமாத்திரம் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எமக்கு தெரிவித்தார்.

No comments: