தபால் மூல விண்ணப்பங்களால் கொரோனா அபாயம் -கபே- அமைப்பு !


தபால் மூலவாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் வேளை  சுகாதார நிலைமை தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்துமாறு -CAFFE- அமைப்பு தேர்தல்கள் ஆணையாளரை கோரியுள்ளது.

தபால் மூல விண்ணப்பங்கள்  விண்ணப்பதாரர்களின் கைகளின் மூலமாக விண்ணப்பிக்கப்படுவதால் விண்ணப்பங்கள் பரிமாற்றத்தின்போது ஒருவருக்காவது கொரோனா வைரஸ் தொற்று இருக்க கூடும் .

அவரின் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் -CAFFE-  அமைப்பு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய அரசாங்க அதிகாரிகளுக்கு  நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும் எனவும் 27ம் திகதிக்குள் அரச அலுவலகங்கள் இயங்கும் என எதிர்பார்க்க முடியாது என்று-CAFFE- அமைப்பு கூறியுள்ளது.


No comments: