மட்டக்களப்பில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க சோதனை


-கனகராசா சரவணன்-

மட்டக்களப்பு நகர்ப் பகுதிக்கு செல்லும் மக்களிடம் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை சோதனையிடும் நடவடிக்கையில் இன்று வியாழக்கிழமை (30) போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியேறுவோர் தமது தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தினை அடிப்படையாக கொண்டே வெளியில் செல்லவேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது

இந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் மட்டக்களப்பு திருகோணமலைவீதி ஊறணி சந்தியில் திடீர் சோதனை நடவடிக்கையினை மேற் கொண்டனர்.

 இதன் போது வீதியால் பிரயாணித்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அடையாள அட்டை இறுதி இலக்கங்களை சோதனையிட்டதுடன் கட்டாயமாக சேவையில் ஈடுபட வேண்டியவர்கள் தவிர்ந்த ஏனையோர் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டும் என மக்களிடம் எடுத்து கூறினார்.

இதேவேளை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 1 அல்லது 2 என்ற எண்களை கொண்டவர்களும், செவ்வாய்கிழமைகளில் 3 அல்லது 4 என்ற எண்களை கொண்டவர்களும், புதன் கிழமையில் 5 அல்லது 6 என்ற எண்களையும், வியாழக்கிழமையில் 7 அல்லது 8 என்ற எண்களை கொண்டவர்களும், வெள்ளிக்கிழமையில் 9 அல்லது 0 என்ற எண்கள் அடிப்படையிலும் வெளியேறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..No comments: