இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை. !


UPDATED :

இலங்கையில் நேற்று மாத்திரம் கொரோனா தொற்றாளர்களாக சுமார் 63 பேர் இனங்காணப்பட்டுள்ளர். இதுவரை ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் இலங்கையில் இனங்காணப்பட்டது நேற்றைய தினமாகும். 

இதனடிப்படையில் இதுவரையில் சுமார் 523 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன். 120 பேர் பூரண குணடைந்துள்ளதாகவும் 07 பேர் மரணித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் அறிக்கை மூலம் தெரியவருகின்றது. 

நேற்று இனங்காணப்பட்டுள்ள 63  தொற்றாளர்களில் 53 பேர் கடற்படை வீரர்கள் என்றும் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று காலை சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில்  குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாட்டு மக்களாகிய நாம் நமது தனி நபர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் மூலமே நமது குடும்பத்துக்கும் எம்மைச்சார்ந்த சமூகத்துக்கும்  பாதுகாப்பினை ஏற்படுத்துவதோடு இதன்மூலம் தேசிய பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த முடியும். எனவே  சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடப்பதே  நாட்டில் தற்கால சூழ் நிலைக்கு சிறந்ததாக  அமையும்.

No comments: