ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிக்கு புதிய நடைமுறை
ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை அனுமதியின்  பிரகாரம் மக்களை  வெளியில் வருமாறு அரசாங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

எனவே  ஊரடங்கு தளர்த்தபடும் வேளையில் கீழ்காணும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மக்கள் வெளியில்வர வேண்டும் என அரசாங்கம் மக்களிடம் கோரியுள்ளது.

முக்கியமானது  !

இதற்கமைய 

திங்கட் கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 1 அல்லது 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி முடியும்.

செவ்வாய் கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 3 அல்லது 4 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள்  வெளியேறி முடியும்.

புதன்கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 5 அல்லது 6 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி முடியும்.

வியாழக்கிழமை கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 7 அல்லது 8 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள்  வெளியேறி முடியும்.

வெள்ளி கிழமை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 9 அல்லது 0 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி முடியும்.

இவை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே மக்கள் சுயபாதுகாப்பினை ஏற்படுத்திக் கொள்வது மிகமுக்கியமானது.


No comments: