காரைதீவு பிரதேச சபையில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுதி தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் !


-சந்திரன் குமணன்-

காரைதீவு பிரதேச சபையின் 26 வது மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் வியாழக்கிழமை(27) காலை 10 மணியளவில் சபையின் கூட்ட மண்டபத்தில் ஆரம்பமானது.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீர்த்த பொது மக்களுக்கு சபையில் இரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தொடரின் போது உறுப்பினர்களிடையே வாத-பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

இதன்போது காரைதீவு பிரதேச சபையில் காரைதீவு பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தொழில் நலிவுற்ற அன்றாட கூலி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொண்டு வரும் தனி நபர்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் , புலம் பெயர் அமைப்புக்கள் அனைவருக்கும் சபையினர் நன்றி தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து காரைதீவு பிரதேச பொது சுகாதார உத்தியோகத்தர்கள் காரைதீவு பிரதேசத்தில் உள்ளூர் வியாபாரிகள் , விற்பனையாளர்களுக்கு அனுமதி மறுத்திருந்த போதிலும் ஆனால் வெளி பிரதேசங்களில் இருந்து இங்கு வியாபாரம் செய்ய  அனுமதித்திருக்கிறார்கள் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வியாபாரத்திற்கு வருவதனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் கவனத்திற் கொண்டு வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். என்றும்-

-இங்குள்ள இறைச்சி கடைகள் ,மீன் வாடிகள் என்பன சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கமைய பூட்டி வைக்கப்பட்டன ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காரைதீவு பிரதேசத்தில் வியாபாரங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியது ஏன் ? என கேள்வி எழுப்பினர். 

இவ்வாறான உத்தியோகத்தர்களால் காரைதீவு பிரதேசத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகளில் ஈடுபடுவோர் தெய்வமாக போற்றப்படுகின்ற இந்த வேளையில் இவ்வாறானவர்களினால் சுகாதார துறையினருக்கு அவமான சின்னமாக இருக்கின்றது.

உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அவசர கால நிலைமையில் எமது நாடும் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது அந்தவகையில் எமது பிரதேசத்தில் கொவிட் -19 தொற்று பரவாமல் இருப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய பிரதேச சபை உறுப்பினர் பிரதேச மக்களுக்கு பல செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். 

இவ்வாறான சூழ்நிலையில் இன்று ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையிலும் தவிசாளர் தலைமையில் அவசர கூட்டம் இன்று நடார்த்தப்பட்டது.

மேலும் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக மக்கள் முப்படையினர் பல்வேறு இடங்களுக்கு மத்தியில் சேவையாற்றுகின்றன்ர இவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனைத்து உறுப்பினர்களும் சபையில் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் கொடிய வைரஸ்களை கட்டுப்படுத்த நாட்டின் ஜனாதிபதி ,பிரதமர் ,சுகாதார அமைச்சர்,சுகாதார பணிப்பாளர், முப்படையினர், வைத்தியர்கள்,தாதியர்கள், அயராது பாடுபட்டு வருகின்றனர் அவர்களது சேவைக்கு உப தவிசாளர் பாராட்டினையும் நன்றியினையும் கூட்டத்தொடரின் போது தெரிவித்தார்.

No comments: