அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண் மீது கூட்டு பாலியல் வல்லுறவு !


-அகத்தியன் செய்திப்பிரிவு-

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை

சம்புநகர்  பகுதியில் நேற்று (29) பெண் ஒருவர் கூட்டு பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மட்டக்களப்பினை சேர்ந்த குறித்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு தொழில் நிமித்தம் வந்திருந்தமை அக்கரைப்பற்று பெருங்குற்ற பரிவு பொலிசாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட குறித்த பெண் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வன்புணர்வு தொடர்பில் கைது செய்யப்பட்டவரர்கள் இன்று (30) அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.

No comments: