திருக்கோவில் பிரதேசத்தில் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு !


-ஜதுர்ஷன் திருக்கோவில்-

திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அம்பாறை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வு கழகத்தினால் கொரோனா சூழ் நிலையில் நிர்கதியாகியுள்ள மக்களுக்கு இன்று உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

 அம்பாறை மாவட்ட விபுலானந்தா புனர்வாழ்வு கழகத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற அதிபருமாகிய கலாபூஷணம் க.சநிதிரலிங்கம் தலைமையில் நடை பெற்ற இவ் நிவாரணப்பணியில் திருக்கோல் பிரதேச செயலாளர் த.கஜேந்தரன் மற்றும் திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் க.சதீஸ்கரன், சிரேஷ்ட கிராம நிலாதி உத்தியோகத்தர் இராசரெட்ணம் மற்றும் .

-பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் S.நடேசன் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் T.மோகனராஜா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்.K.வினோ, கிராமஉத்தியோகத்தர்களானS.சுகந்தன்,A.அனித்தன், V.பிரசாந், ஜே.கே ஜதுர்ஷன் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும்   ரூபாய் 2300 பெறுமதியான 250  உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: