இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளை யாழ்ப்பாணத்தின் நிலை !


-அகத்தியன் செய்திப்பிரிவு-

நாடளாவிய ரீதியில் கொழும்பு கம்பஹா களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய

இடர்வலையங்களை தவிர்த்து ஏனைய 21 மாவட்டங்களுக்கும் கடந்த 28ம் திகதி ஊரடங்கானது தற்காலிகமாக தளர்த்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் காலை 05 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கானது மாலை 08 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரப்பிரிவினரும் அரசாங்கமும் பல வழிகளில் மக்களுக்கு அறிவுறுத்தல்களை விடுத்து கொண்டு இருக்கின்றார்கள்.

அந்தவைகயில் ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களுக்கு மாத்திரம் அடையாள அட்டடை அனுமதி திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் நாடயாவிய ரீதியில் அனைத்து மக்களும் சமூக இடை வெளி, முகக்கவசம் அணிதல், புது இடங்களுக்கு சமூகமளிக்கின்றவேளையில் கைகளை நன்கு சவர்க்காரம் இட்டு கழுவுதல் என்று பல நடைமுறைகளை மக்களுக்கு அறிவுறுத்திய வண்ணமுள்ளனர்.


இந் நிலையில் யாழ்ப்பாண நகரத்தின் இன்றைய நிலை கிழுள்ள புகைப்படங்களில் எம்மால் காணக் கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக சமூக இடைவெளி என்பது இன்று யாழ்ப்பாண நகரில்  ஒரு சில இடங்களில் பேணப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடையமாக இருக்கின்றது .

முக்கியமாக கொரோனா வைரஸானது நெருக்கமான இடங்களில் வாழும் இதனால் தொற்று அதிகம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. இதனாலே சமூக  இடைவெளி பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே நாட்டு மக்கள் அனைவரும் தேசிய மற்றும் தனிநபர் பாதுகாப்பு கருதி இலங்கை சுகாதாரப் பிரிவு விடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுவது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

மேலும் நாளை இரவு 08 மணிக்கு நாடளாவிய ரீதியல் ஊரடங்கு அமுல்

கீழுள்ள லிங்கை அழுத்தவும்

நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு !

No comments: