கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களுக்கான தகவல் !


தற்போது நாட்டில் உள்ள சூழ் நிலையில் 500ற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வெரஸ் பரவும் இடங்கள் புதிய ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


குறித்த ஆய்வானது இலங்கை ஆராய்ச்சி சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் வைரசானது சன-நெரிசல் மிக்க இடங்களிலும் காற்றோட்டம் இல்லாமல் இருக்கும் இடங்களிலும் (அறைகளில் தங்கியிருந்து எமக்கு பரவக் கூடும்  இதன் போது காற்றின் சிறு துணிக்கையூடாக எமக்கு அது பரவக் கூடும்.

எனினும் காற்றினுடாக பரவக்கூடும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகவும் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மாத்திரமே இது நிகழும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும் சீனாவின் வூஹான் நகரில் உள்ள வைத்தியசாலையில் மலசலகூட அறைகள், சனநெரிசல் மிக்கஅறைகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் அறைகளில் உள்ள காற்றுப்பரப்பில் கொரோனா வைரஸின் மரபணு துணிக்கைகள் கட்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

No comments: