சம்மாந்துறை விளினியடி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது


-சந்திரன் குமணன்-

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினியடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (28) மாலை அதிரடிப்படையினர் 30 வயதான ஒருவரை 6
கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

கைதான சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வாறு இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் மே 5 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

அண்மைக்காலமாக சம்மாந்துறை பொலிஸ் பிரிவுகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: