மட்டக்களப்பில் நடமாடும் ஏ.ரீ.எம் சேவை !(எச்.எம்.எம்.பர்ஸான்)

கொரொனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பொதுமக்கள் தேவைகளை இலகுவாப் பெற்றுக் கொள்ள மட்டக்களப்பு  ஓட்டமாவடி மக்கள் வங்கிக் கிளையின் ஏற்பாட்டில் நடமாடும் ஏ.ரீ.எம்.சேவையொன்று இன்று (26) ஞாயிற்றுக்கிழமை மீராவோடை பொதுச் சந்தைப் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நடமாடும் சேவை இன்று மாலை 6 மணி வரை குறித்த பகுதியில் சேவையில் ஈடுபடும் என்று நடமாடும் சேவைக்குப் பொறுப்பான ஊழியர்கள் தெரிவித்தனர்.

இச் சேவையின் ஊடாக அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

நடமாடும் ஏ.ரீ.எம்.சேவையில் பணம் பெற வருகை தரும் மக்களின் சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பேணும் வகையில் கைகளை கழுவி சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: