பெறுபேற்றில் திருப்தியில்லை என துாக்கில் தொங்கிய மாணவி !


நேற்றையதினம் வெளியிடப்பட்ட கல்வி.பொ .த சாதாரண தர பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால்முல்லைத்தீவு சிலாவத்தை 
பகுதியில் இன்று (28) மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். 

உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்க கூடிய தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என்ற மனக்கவலையில் இன்று வீட்டின் அறையை பூட்டிவிட்டு துணி ஒன்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் .

குறித்த மாணவிக்கு 2A 2B 3C 2S பெறுபேறு கிடைக்கப் பெற்று 09 பாடங்களிலும் சித்தி பெற்று உயர்தரம் கல்வி பயில தகுதியுடையவராக இவர் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த  மாணவி துாக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
  
குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments: