ஊரடங்கு தொடர்பில் விசேட செய்தி !


அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அமுல் படுத்தப்பட்டுள்ள  ஊரடங்கானது எதிர்வரும்  திங்கள்கிழமை (27) அதிகாலை 5 மணி முதல் நீக்கப்படும் என்று பெலிசார்  அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

27 திங்கட்கிழமைக்கு பின்னர் பொலிஸ் ஊரடங்கு நாட்டில் இருக்காது எனவும் குறித்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மறு அறிவிப்பு வரும் வரை கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம்  மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்ய அனுமதி மறுப்பு எனவும் பொலிசார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: