திருக்கோவில் பிரதேசத்தில் இன்று நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


-சதுர்சன் திருக்கோவில்-

இலங்கையில் கொரோனா நெருக்கடி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணிகள் பல்வேறு அமைப்புக்களாலும்  அரசாங்கத்தினாலும் தனவந்தர்களாலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் திருக்கோவில், கோமாரி பிரதேசங்களில் நாட்டின் தற்போதைய சூழலில் வருமானம் இழந்து காணப்படும் 165 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கப்பட்டது.

ஜெயக்காந்தன் யோகேந்திரா அவர்களின் முழுப்பங்களிப்புடன் குறித்த நிவாரணப்பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் 2ம் கட்ட நிவாரணப் பணிகள் விரைவில் இடம் பெறவுள்ளதாக நிவரணக குழுவினர் தெரிவித்தனர்.
No comments: