விரைவில் ஊரடங்கை முழுமையாக தளர்த்தக்கூடியதாக இருக்கும் ? -ஜனாதிபதி


விரைவில் ஊரடங்கு சட்டத்தையும் முழுமையாகத் தளர்த்தக்கூடியதாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி  செயலகத்தின் இன்று நடை பெற்ற கூடடத்தின் போமது  நோய்த்தொற்றை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என்று சமயத் தலைவர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவித்த வேளையில்  ஜனாதிபதி மேற் கண்டவாறு தெரிவித்தார் 

கொரோனா தொற்று மற்றும் தேர்தல் உட்பட்ட பல விடயங்களை - பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் ஆகியோருடன் இன்று 28 ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கலந்துரையாடினார்.

உரிய பயனைத் தராத, அர்த்தமற்ற மற்றும் அதிக செலவு கொண்ட தேர்தல் பிரச்சார முறைமையை மாற்றுவது குறித்து நானும் சிந்தித்து வருகின்றேன் என்பதையும் ஜனாதிபதி  அவர்களிடம் தெரிவித்தார்.

கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீ சங்க சபையின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போது பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்களையும் ஜனாதிபதி பகிர்ந்து கொண்டார்.

கொவிட் 19 நோய்த்தொற்று குறித்த தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்த தம்மாலங்கார மகாநாயக்க தேரரும் பேராயர் அவர்களும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி நாட்டு மக்களைக் பாதுகாப்பதற்கு எமது அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித் திட்டங்களைப் பாராட்டினர்.

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு வீடுகளிலிருந்து சமயக் கிரியைகளில் ஈடுபடுமாறு பௌத்த மக்களுக்குத் தானும் அறிவிப்பதாக மகாநாயக்க தேரர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கேட்டறிந்த மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள், இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னால் உள்ளவர்களை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தற்கொலைத் தாக்குதல்களின் மூலம், பெருமளவு மக்களைக் கொல்லுவதையும் கடந்த நோக்கங்கள் இருந்திருக்கின்றன என்று நான் குறிப்பிட்டதுடன், அந்த நோக்கங்களின் பின்னால் இருந்தவர்களைக் கண்டறிய அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

வீண் விரயங்கள் மற்றும் நோய்க்கிருமித் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள தேர்தல் பிரச்சார முறைமையில் இருந்து விலகி - புதிய தேர்தல் பரப்புரை முறைமை ஒன்றை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்று பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.
விவசாயப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரதேசங்களில் -குளங்கள் மற்றும் நீர்ப்பாசன முறைமைகள் அழிவடைந்து வருவதாக தம்மாலங்கார மகாநாயக்க தேரர் அவர்கள் கவலை வெளியிட்டு, அதனை எனது கவனத்திற்குக் கொண்டுவர விரும்பியதாகத் தெரிவித்தார்.

அப்போது - அவற்றைத் திருத்தியமைப்பதற்காக அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க ஆவன செய்வேனென ஜனாதிபதி உறுதியளித்தார்.

No comments: