க.பொ.த சாதாரணதர | பெறுபேறுகள் தொடர்பில் விசேட செய்தி !


கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவித்தலென்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில் கடந்த ஆண்டில் முடிவுற்ற கல்வி பொதுத்ததராதர சாதாரணப்பரீட்சை பெறுபேறுகளை இந்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது என்றும் இதன் காரணமாக பெறுபேறுகளை இணையத்தின் மூலமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கும் வழியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு கடந்த  ஆண்டில் 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் 7 இலட்சத்து 17ஆயிரத்து 8பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கவிடையமாகும்


இந் நிலையில் www.doenets.lk  என்ற இணையத்தளத்தின் மூலமாக பெறுபேறுகளை வெளியிட சுகாதர நடைமுறைகளின் பிரகாரம் வேலைப்பாடுகள் இடம் பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

பெறுபேற்று சீட்டினை பெற்றுக் கொள்வதற்கு வலைய, மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு  பயனர் பெயர், கடவுச் சொல் என்பன வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


No comments: