ஊரடங்கு தொடர்பான செய்தி அறிக்கை !


கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று காலை 05 மணிக்கு

தளர்த்தப்பட்டுள்ளது மேலும் குறித்த 21 மாவட்டங்களிலும் இன்று  இரவு 8 மணிக்கு மீள ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு  தெரிவித்துள்ளது.

மேற்குறித்த 21 மாவட்டங்களில் எதிர்வரும் 2020.05.01ம் திகதி வரை நாளாந்தம் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் மறுநாள் அதிகாலை 05 மணிக்கு தளர்த்தப்படும்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் அரசாங்கம் சன நெரிசலை குறைககும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தேசிய அடையாள அட்டை அனுமதிக்கு அமைவாக அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேற முடியும்.

மேலும் கொரோனா வைரஸ்  இடர்வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 4ம் திகதி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: