அக்கரைப்பற்றில் முடக்கப்பட்டிருந்த பகுதி இன்று விடுவிக்கப்பட்டது !


அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலஸ் பிரிவிற்குட்பட்ட  பிரதேசத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கொரோனா நோயாளி ஒருவர் இனங்கணாப்பட்டதனையடுத்து குறித்த நபர் இனங்கணாப்பட்ட பகுதியில் சுமார் 500 மீற்றர் சுற்றளவிற்குட்பட்ட பகுதி முடக்கப்பட்டிருந்தது  இதன் பின்னர் இரண்டாவது நபரும் இனங்காணப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் இவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியிருந்ததாக இனங்காணப்பட்ட நபர்கள்   தனிமைப்படுத்தலின் பின்னர் நோய் தொற்று இல்லை என அறிக்கை வழங்கப்பட்டு வீட்டிற்கு திரும்பியிருந்தனர்.

இப் பகுதியில் இருந்த 350 குடும்பங்களை சேர்ந்த 900 பேர் வெளிச்செல்ல அனுமதிக்கப்படாது காணப்பட்டதுடன் உள்நுளைய அனுமதி முற்றிலும் மறுக்கப்பட்டிருந்தது.


இந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த நோயாளிகள் இருவரும் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.

அதன் பின்னர் முடக்கப்பட்டிருந்த பகுதியானது இன்று (29) விடுவிக்கப்பட்டு அப்பகுதி மக்களின் வாழ்க்கை நிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.No comments: