அடையாள அட்டை சோதனையின் பின் கல்முனை - மட்டக்களப்பு போக்குவரத்துச் சேவைகள் !-செ.துஜியந்தன்-

அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பொதுப் போக்கு வரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் நடைபெற்றுவருகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தரும் இலங்கை போக்கு வரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் மற்றும் தனியார் பஸ்கள் மட்டக்களப்பு பெரியகல்லாறு பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து பயணிகள் இறக்கப்பட்டு அவர்களது அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டபின்னர் அவசியமான பணயம் மேற்கொள்ளப்படு வோர் மட்டும் மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

பயணிகள் ஏற்றிவரும் வாகனங்கள் பெரியகல்லாறு கிராமத்துடன் தங்கள் போக்குவரத்துச் சேவையை நிறுத்திக்கொள்கின்றன.

இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வருகைதரும் பொதுப்போக்குவரத்துச் சேவைக்கான பஸ்வண்டிகள் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு பாலத்துடன் பயணம் செய்வதை நிறுத்திக்கொண்டு பயணிகள் இறக்கிவிடப்படுகின்றனர். 

இவ்வாறு இறக்கிவிடப்படும் பயணிகள் நீண்டதூரம் நடந்து சென்று பெரியகல்லாறு பொலிஸ் சோதனைச் சாவடியில் கொரோனா சுகாதாரபாதுகப்பு நடைமுறைக்கு ஏற்ப பரிசோதிக்கப்பட்டபின் அங்கிருந்து வாகனங்கள் மூலம் கல்முனை நோக்கிபயணம் செய்யஅனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலே பொதுமக்கள் தங்கள் பயணங்களை மேற்கொண்டுவருகின்றனர். 

பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதை கூடியளவு தவிர்க்குமாறும் பொலிஸார் கொரோனா வைரஸைக்கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பெரியகல்லாறு பொலிஸ் சோதனைச்சாவடியில் ஈடுபட்டுள்ள பொலிஸார் வேண்டுகோள்விடுக்கின்றனர்.No comments: