க.பொ.த. சா.த பரீட்சைப்பெறுபேற்றில் கிழக்கு மாகாணம் 9வதுஇடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேற்றம்.


(காரைதீவு நிருபர் சகா)

நேற்று வெளியான க.பொ.த சா.தரப்பரீட்சைப் பெறுபேற்றின்படி தொடர்ந்து பலவருடங்களாக 9வது இடத்திலிருந்த கிழக்கு மாகாணம் இம்முறை 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வடமாகாணம் 8வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு சென்றுள்ளது.

இலங்கையிலுள்ள 9மாகாணங்களில் கல்வியில் முதனிலையில் சிறந்துவிளங்கிவந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் கடந்த பலவருடங்களாக கடைநிலையிலேயே இருந்துவந்துள்ளன.

கடந்தகாலங்களில் தரம்5புலமைப்பரிசில் க.பொ.த சா.த பரீட்சை க.பொ.த உயாதரப்பரீட்சை ஆகிய பொதுப்பரீட்சைகளில்; 9ஆம் ஸ்தானத்திலிருந்த கிழக்கு மாகாணம் படிப்படியாக முன்னேறிவருகிறது.

ஒருவருடத்திற்குமுன்பாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரின் துரதிஸ்டியான கல்விநோக்கும் இறுக்கமான நிருவாகமும் இத்தகைய முன்னேற்றத்திற்கு பிரதான காரணமாகவிருந்ததாக கல்விச்சமுகம் சுட்டிக்காட்டுகிறது.

இறுதியாக வெளிவந்த க.பொ.த உயர்தரப்பெறுபேற்றின்படி 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறும் குறிப்பிடத்தக்கஅடைவை காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்குமாகாணத்தில் உள்ள 17கல்வி வலயங்களுள் கல்முனை வலயம் முதலிடத்தையும் அக்கரைப்பற்று தெஹியத்தககண்டி ஆகிய வலயங்கள் முறையே 2ஆம் 3ஆம் இடங்களைப்பெற்றுள்ளன.


No comments: