அரச 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு திட்டத்தில் மட்டக்களப்பில் 41 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது !


(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச 5 ஆயிரம் கொடுப்பனவு திட்டத்தில் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்தி 826 குடும்பங்களுக்கு 91 கோடியே 41 இலச்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த பணம் வழங்கும் உதவி திட்டம் இவ்வாரம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை (24) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தெரிவித்தார்

மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு அவர் தெரிவித்தார் .

இம்மாவட்டத்தில் வயோதிபர் கொடுப்பனவாக 15 ஆயிரத்தி 51 குடும்பங்களுக்கு 7 கோடியே 52 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாவும், வலது குறைந்தவர்களுக்குரிய கொடுப்பனவாக 6 ஆயிரத்தி 651 குடும்பங்களுகு;கு 3 கோடியே 32 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாவும், சமுர்த்திப் பயனாளிகள் காத்திருப்புப் பட்டியலிலுள்ளவர்கள் 1 இலட்சத்து 36 ஆயிரத்தி 177 குடும்பங்களுக்கு 68 கோடியே 8 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாவும் இதுவரையில் நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது

இதுதவிர இம்மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த 23 ஆயிரத்தி 422 குடும்பங்களுக்கு 11 கோடியே 71 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவும், சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவாக 248 குடும்பங்களுக்கு 12 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவும், நிவாரணம் கிடைக்கவில்லையென மேன்முறையீடு செய்த ஆயிரத்து 277 குடும்பங்களுக்கு 63 இலட்சத்து85 ஆயிரம் ரூபாவும் நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது

அதேவேளை இம்மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் நலன் விரும்பிகளால் வழங்கப்பட்ட உலர் உணவு நிவாரணப் பொதிகள் 69 ஆயிரத்தி 449 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த கொரோன தொற்று நோயை கட்டுப்படுத்த தொடர்ந்து .

அர்ப்பணிப்புடன் சேiவையாற்றிவரும் சுகாதாரதுறையினர், அரச திணைக்களங்க உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்ததுடன்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திகன் அறிவுறுத்தல்களுக்கமைவாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு செயல்படுத்தப்படுவதாகவும் அங்கு 47 கொரோனா நோய் இனங்காணப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதற்கான வசதிகளை செய்து கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: