ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் 39875 பேர் கைது !


நாடளாவிய ரீதியி்ல்  அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில்  கடந்த மாதம் 20ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார்  39875 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்திற்குள்  ஊரடங்கு சட்டத்தினை மீறிய  1,309 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 348 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  இதுவரையில் மொத்தமாக 10257 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


No comments: