திருகோணமலையில் 29 கடற்படை சிப்பாய்கள் தனிமைப்படுத்தலில் !


29 கடற்படை சிப்பாய்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நேற்று மாத்திரம் சுமார் 53 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்ததாக இராணுவத் தளபதி சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்திற்கு விடுமுறையில் வந்த 29 கடற்படை சிப்பாய்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வி.பிரேமானந் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விடுமுறைக்காக வந்திருந்த 71 இராணுவ சிப்பாய்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணு சிப்பாய்கள் 71 பேரையும் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரி விடுதிகளில் தனிமைப்படுத்த இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.No comments: