கடந்த 24 மணி நேரங்களில் ஊரடங்கை மீறிய1,128 பேர் கைது !


நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில்  மொத்தமாக  41 ஆயிரத்து 03  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (28) காலை 6 மணியுடன் முடிவுற்ற  24 மணித்தியாலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள  ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சுமார்  
303 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் .1,128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு  அமுல்படுத்தப்பட்ட காலம் தொடக்கம்   இதுவரையான காலப்பகுதியில் 10,560 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

No comments: